அட்டாளைச்சேனையில் பல்லாயிரக்கணக்கானோருடன், மு.காவின் இப்தாரும் தெருவிளக்கு ஆரம்பிப்பும்

சப்னி அஹமட், நுஸ்கி அஹமட்-

நகரத்திட்டமிடல் அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம்அவர்களின் நிதியிலிருந்தி அட்டாளைச்சேனை பிராதான வீதியில் அமைக்கப்பட்ட தெருவிளக்குமின்கம்பங்களை ஒளிரச்செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் இன்று (16)மாலை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட்நஸீரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பிரதி சுகாதார அமைச்சர் பைஷல் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்ஆகியோரினால் ஒப்பிரதேசத்தின் மிக குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த தெருவிளக்குகள்இயங்கச்செய்யப்பட்டதுடன் 02ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் போராளிகள்கலந்துகொண்டன இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் பைஷால்காசீம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுடீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தவிசாளர் அப்துல் மஜீத். உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் போராளிகள் என பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மர்ஹூம் றிஸ்வி சின்னலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் மசூர்சின்னலெப்பை ஆகியோருக்கான விசேட துஆப்பிராத்தனையுடன் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த இப்தார் நிகழ்வுக்கு கலந்துகொண்ட அனைவருக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் நஸீர் நன்றியினை தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -