பாறுக் ஷிஹான்-
யாழ் வை.எம்.எம்.ஏ நிறுவன ஏற்பாட்டில் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினம்(18) யாழ்ப்பாணம் கிளிநொச்சி மண்கும்பான் நயீனாதீவு சாவகச்சேரி பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முஸ்லீம் மக்களுக்கு உலருணவுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த உலருணவுகளை யாழ் வை.எம்.எம்.ஏ நிறுவன ஏற்பாட்டாளர் றஹீம் சமூக சேவகர்களான நஸீர் றிஸ்வான் றொயீஸ் ஆகியோர் மேற்குறித்த பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளித்துள்ளனர்.
சுமார் 1000க்கு அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இவ்வுலருணவில் சீனி மா பருப்பு தேயிலை உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குகின்றது.
