ஓட்டமாவடி யங்லயன்ஸ் நடாத்திய இஃப்தார் நிகழ்வு…!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ல்குடா ஓட்டமாவடி பிரதேசத்தில் விளையாட்டு துறையில் மட்டுமல்லாது அரசியல், சமூக விடயங்களிலும் பாரிய தாக்கத்தினை செலுத்தி வருகின்ற யங்லயன்ஸ் விளையாட்டு கழகத்தின் நீண்ட கால முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும், இலங்கை போக்குவரத்து சபை ஊழியருமான மொஹம்மட் அன்வர் கடந்த மாதம் பொலன்னறுவையில் வைத்து தான் கடமையாற்றிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தலில் வபாத்துக்குள்ளாகியமை யங்லயன்ஸ் விளையாட்டு கழகத்தினை மட்டுமல்லாது கல்குடா பிரதேசத்தினையே ஆழ்ந்த துயரத்துக்கு உள்ளாக்கிய விடயமாக பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இன்று 20.06.2017 ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் பாடாசலையில் அகால மரணமான அஸ்ஸஹீத் அன்வரின் ஞாபகார்த்தமாக யங்லயன் விளையட்டு கழகமானது இஃப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்து அன்வரின் ஒளிமயமான மறுமை வாழ்விற்கான துவா பிரார்த்தனையினையும் ஏற்பாடு செய்திருந்தது.

பிரதேசத்தில் இருக்கின்ற அனைத்து கழக உறுபினர்களின் பங்கு பற்றுதலோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த இஃப்தார் நிகழ்வில் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் (ஸஹ்வி) மார்க்க சொற்பொழிவாற்றி அஸ்ஸஹீத் அன்வரிடம் இருந்த நற்பன்புகளை ஞாபகமூட்டியதுடன் அவருக்காக நோன்பு திறக்கின்ற நேரத்தில் தனிப்பட்ட முறையில் துவா பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் இஃப்தார் நிகழ்விற்காக வருகை தந்தவர்களிடம் வேண்டிக்கொண்டார். குறித்த இஃப்தாரின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -