க.கிஷாந்தன்-
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மண்சரிவு 29.06.2017 அன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு வட்டவளை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.