டோஹா கட்டாருக்கான சகல விமானங்களும் திட்டமிடப்பட்டுள்ளதன் பிரகாரம் இயக்கப்படும் என்று, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டாருக்கான விமான சேவையை, வளைகுடா விமான நிறுவனங்கள் பல நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையிலேயே, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
இதேவேளை, கட்டாரிலிருந்து இலங்கைக்கு, நேற்று (06) இரண்டு விமானங்களும் திரும்பின. அங்கிருந்து, ஆகக் குறைந்தது இலங்கை தொழிலாளர்கள் 1,000 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
டோஹாவிலிருந்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான, கட்டார் எயார்வைஸ் நிறுவனத்தின் நேரடி விமானங்களில் ஒன்று, நேற்றுக் காலை 9:30க்கும் மற்றைய விமானம் பிற்பகல் 3:20க்கும் வந்தடைந்தன. மூன்றாவது விமானம், இன்று (07) அதிகாலை 2:10க்கு கட்டுநாயக்கவுக்குத் திரும்பவுள்ளது.