மைனாரிட்டி சியா பிரிவை சேர்ந்த 30 வயதான தமூர் ரஸா என்பவருக்கு பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. சைபர் க்ரைம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சைபர் க்ரைம் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
ஓகராவை சேர்ந்த ரசாக் மீது அவருடன் பணி புரியும் சக ஊழியர் அளித்த புகாரின் பேரில் பஹவல்பூரில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு பஹவல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சைபர் க்ரைம் சட்டத்தின் கீழ், ரஸாவிற்கு மரண தண்டனையை நீதிபதி ஷஹிப் அஹ்மத் வழங்கியுள்ளார்.