தேவையா இந்த பில்ட் - அப்? [Political Gossip]

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது இன,மத பேதங்களைக் கடந்து-அரசியல் வேறுபாட்டை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால்,சில அரசியல்வாதிகள் அந்தத் துன்பகரமான நிகழ்வின்போதுகூட தங்களின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் கீழ்த்தரமான வேலைகளை செய்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தாங்கள் களத்தில் நின்று பணியாற்றுகிறோம் என்று மக்கள் சொல்ல வேண்டும்;அதனூடாக தங்களது அரசியல் செல்வாக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஓவர் பில்ட்-அப் கொடுத்து மாட்டிக்கொண்ட அரசியல்வாதிகளும் உள்ளனர்.

நிவாரணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த அரசியல்வாதி ஊடகங்களின் கமராவைக் கண்டதும் நகைச்சுவை நடிகர் வடிவேலுபோல் ஆகிவிட்டார்.

ஓரடிக்கும் குறைவான நீரில் நடந்து வந்துகொண்டிருந்தார் அந்த மூதாட்டி.நடப்பதற்கு எந்தச் சிரமமும் அவருக்கு இருக்கவில்லை.

கமராவைக் கண்டதுதான் தாமதம்.உடனே அந்த மூதாட்டியைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினார் அந்த அரசியல்வாதி.

அந்த பில்ட்-அப்பை அறிந்த அந்த ஊடகவியலாளர் சிரிப்பை அடக்கிக்கொண்டு படமெடுத்தார்.

இதை அறிந்திராத அந்த அரசியல்வாதி பாட்டியைப் பக்குவமாகத் தூக்கிக் கொண்டு போலி கம்பீரத்துடன் நடந்து சென்றார்.எதுக்கு பாஸ் இந்தப் பொழப்பு?
எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -