சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த [Political Gossip]

எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்-

சைக்கவே முடியாது என்று எல்லோராலும் கருதப்பட்ட மஹிந்தவின் ஆட்சி 2015 இல் கவிழ்வதகு மூல காணமாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

2005 இல் ஜனாதிபதி பதவியில் இருந்து சந்திரிக்கா ஓய்வு பெறத் தயாரானபோது அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராகவும் 2005 இன் ஜனாதிபதி வேட்பாளராகவும் மஹிந்த ராஜபக்ஸவை நியமித்தார்.

சிறிமாவுக்கு எதிராக மஹிந்த செய்த சதிகள் அனைத்தையும் நினைவுபடுத்தி மஹிந்தவை இவ்வாறு நியமிக்க வேண்டாம் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 56 பேர் கூறியும்கூட அதைப் பொருட்படுத்தாமல் சந்திரிக்கா அவரையே நியமித்தார்.

இருந்தும்,2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே மஹிந்த அவரது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் மஹிந்தவுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு சந்திரிக்கா தொலைபேசி அழைப்பை எடுத்தார்.சந்திரிகா தனக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கியதைக்கூட நன்றி கூறாது அவரை தூஷணத்தால் திட்டத் தொடங்கினார் மஹிந்த.

இதை சற்றும் எதிர்பார்த்திராத -ஏன் இவ்வாறு ஏசுகிறார் என்று அறியாத சந்திரிக்கா நிலைகுலைந்து போனார்.சந்திரிக்கா எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.இவ்வாறு 19 நிமிடங்கள் திட்டித் தீர்த்தார் மஹிந்த.

இறுதியில் நன்றி என்று ஒரு வார்த்தையை மட்டும் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார் சந்திரிகா.இதன்பிறகு சந்திரிகாவின் பாதுகாப்பையும் குறைத்து சந்திரிக்காவுடன் தேவை இன்றி மோதத் தொடங்கினார் மஹிந்த.

சந்திரிகாவின் இராஜதந்திரம் தெரியாமல் ஒரு கிராமத்துச் சண்டியன்போல் சந்திரிக்காவுடன் மஹிந்த சண்டை பிடித்தார்.மஹிந்தவை அரசியலில் இருந்து இல்லாமல் செய்வதற்கு சந்திரிகா அன்றே முடிவு செய்துவிட்டார்.

மஹிந்தவுக்கு எதிரான சந்திரிக்காவின் ஆட்டம்10 வருடங்களின் பின் 2015 ஜனாதிபதித் தேர்தலில்தான் வெற்றி பெற்றது.

இந்தச் சம்பவத்தை மஹிந்தவின் சகாக்கள் சிலர் அண்மையில் மஹிந்தவுக்கு நினைவுபடுத்தினராம்.
இதுக்குத்தான் ஆழம் அறிந்து காலை விடணும் என்றது.இப்ப போச்சா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -