கல்குடா - ஷீயா மதத்தினரின் அலுவலகம் தாக்குதல் தொடர்பில் SLTJ வின் கருத்து

ல்குடா - ஓட்டமாவடி பகுதியில் அமைந்திருக்கும் ஷீயா மதத்தினருக்கு சொந்தமான அலுவலகம் ஒன்று கடந்த 08.06.2017 அன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.குறித்த தாக்குதலுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் தான் காரணம் என ஷீயா மதத்தினர் சமூக வலை தளங்களில் கருத்துப் பதிந்து வருவதுடன், சிங்கள மொழி செய்தித் தளங்கள் சிலவற்றிலும் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளமை நமது கவனத்திற்கு எட்டியது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்த வரையில் நாம் எந்த சந்தர்பத்திலும் வன்முறையை கையில் எடுப்பவர்கள் அல்ல, என்பதுடன் வன்முறைக்கு எதிரான பாரிய பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் என்பது நாடறிந்த உண்மையாகும்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் சிறப்பான வழிமுறையை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் கடைபிடித்து வருகிறது. எந்தக் கொள்கையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய வழிகேட்டை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் படி நிரூபிக்கும் பணியில் தான் தவ்ஹீத் ஜமாஅத் ஈடுபடுமே தவிர எந்நேரத்திலும் வழிகேடர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் நடைமுறையை தவ்ஹீத் ஜமாஅத் பின்பற்றியதில்லை.

குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் கண்ணோட்டத்தில் இஸ்லாத்திற்கும் ஷீயாக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஷீயாக்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்பதுடன், அவர்கள் தனியான மதக் கொள்ளையை கடைபிடிப்பவர்கள். என்பதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.கல்குடா - ஓட்டமாவடி பகுதியில் செயல்பட்டு வரும் ஷீயாக்களுக்கு எதிராக பாரிய அளவிலான எதிர்ப்புப் பிரச்சாரங்களை ஜனநாயக முறைப்படி பேச்சிலும், எழுத்திலும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.

ஷீயாக்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்ட பகிரங்க பிரச்சாரங்களின் போது, ஷீயாக்கள் நேரடியாக நமது பிரச்சாரகர் மீதும் கிளை அங்கத்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமையும் கடந்த காலங்களில் நடைபெற்றவையாகும்.

ஷீயாக்கள் மீதோ மற்ற எந்த வழிகேடர்கள் மீதோ தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்களோ, பிரச்சாரகர்களோ, நிர்வாகிகளோ வன்முறையை கட்டவிழ்த்தது கிடையாது. மாறாக பல சந்தர்ப்பங்களில் நாம் தான் பலராலும் தாக்கப்பட்டிருக்றோம். என்பதையும் இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறோம். 

இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் ஜனநாயக முறைப்படி யாரும் எக்கொள்கையையும் கடைபிடிக்கவோ, பிரச்சாரம் செய்யவோ எந்தவித தடையும் அரசியல் யாப்புப் பிரகாரம் கிடையாது. இலங்கையில் ஷீயாக்கள், காதியானிகள், இறந்தவர்களை வணங்கிவரும் கப்ரு வணங்கிகள், தப்லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் என பலரும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.இந்நிலையில் ஒருவரின் பிரச்சாரத்தை ஜீரணிக்க முடியாதவர்கள் அதற்கு எதிராக குர்ஆன் சுன்னா அடிப்படையில் குறித்த சாராரின் பிரச்சாரத்தை, வழிகேட்டை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, வன்முறையை ஏவிவிடுவது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள தக்க நடைமுறையல்ல என்பதுடன் வன்முறையை கைக்கொள்வது பெரும் கண்டனத்திற்குறியதாகும் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

ஆகவே, யாராக இருந்தாலும் முறைப்படியாக பிரச்சாரத்தின் மூலம் வழிகேட்டுக்கு எதிராக செயல்படுவதுடன் வன்முறையை கையிலெடுப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

இவன்,
A.G ஹிஷாம் MISc
செயலாளர், தவ்ஹீத் ஜமாத் – SLTJ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -