கிழக்கில் யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் யுத்த காலக் கஷ்டங்களுடனேயே வாழ்ந்து வருகிறோம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கிழக்கில் யுத்தம் முடிந்து தற்போது 10 வருடங்கள் கழிந்து விட்ட போதும் ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டி வாழும் மக்கள் முடிவின்றித் தொடரும் யுத்த கால அவலங்களுடனேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மக்களுக்காகப் பணியாற்றும் 'சொன்ட் ளுழுNனு ளுழஉயைட ழுசபயnணையவழைn நேவறழசமiபெ கழச னுநஎநடழிஅநவெ அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு' நிறுவனத்தின் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் தர்மரெட்னம் விஜயகுமார் தெரிவித்தார்.

இதுவிடயமாக புதன்கிழமை 12.07.2017 கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை வீதியை அண்டிய கிராம மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்வதாக அப்பிரதேச கிராம மக்களும் சிவில் அமைப்புப் பணியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டி வாழும் கொடுவாமடுவிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையான பெரியபுல்லுமலை வரை வாழும் பல கிராமங்களில் வாழும் மக்கள் காலாகாலமாக முகங்கொடுத்து வருவது ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இங்கு பதுளை வீதியை அண்டி இருக்கும் சுமார் 20 இற்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சன சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட சுமார் 15 இற்கு மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நீண்ட ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது அவர்கள் காலாகாலமாக எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் தொல்லை, குடி தண்ணீர்ப்பிரச்சினை, வீதிகள் சீரின்மை. மேய்ச்சல் தரையில் அத்துமீறல், உள்ளுர் கிராம மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமை, கருங்கற் சுரங்கங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதால் ஏற்படும் பக்கப் பாதிப்புக்கள், இயற்கை வளங்களான மணல், காட்டு மரங்கள் ஆகியவை அழிக்கப்படல், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்களின் மீண்டெழ முடியாத வாழ்வாதாரப் பிரச்சினைகளை கிராம மக்கள் வெளிக் கொண்டு வந்தனர்.

இப்பேர்ப்பட்ட பிரச்சினைகளை மக்களிடம் அதிகாரிகள் கேட்டறிவதில்லை என்றும் அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைக் கூட அதிகாரிகள் அலட்சியம் செய்து விடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிலவேளை மக்களின் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக மக்கள் நலன் சார்ந்த ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களை அதிகாரிகள் வெறுமனே கண்துடைப்புக்காகத் ஆரம்பித்து வைக்கின்றனர். ஆனால் அவற்றை முடிவுறுத்துவதில்லை.

மட்டக்களப்பு - பதுளை பிரதான வீதியிலிருந்து மாவளையாறு, இராஜபுரம், சின்னப் புல்லுமலை கிராமங்களுக்கு உட் செல்வதானால் கிட்டத்தட்ட 03 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த வீதிகளுக்கு 300 மீற்றர், 500 மீற்றர் தூரம் வரைதான் கொங்கிரீட் இட்டுள்ளார்கள் வீதியின் ஏனைய பகுதியெல்லாம் குன்றும் குழியுமாகி உடைந்து படு மோசமாக உள்ளது. இந்த நிலையில்தான் இங்குள்ள பெரும்பாலான உள் வீதிகள் காட்சி தருகின்றன.

மாவளையாறு கிராமத்தில் 50 குடும்பத்தவர்கள் வசிக்கின்றார்கள். அங்கிருந்து வைத்தியசாலைக்கு செல்வோர், கற்பிணிபெண்கள், தொழிலுக்கு செல்வோர், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் இப்படியானவர்கள் எல்லாம் சேதமடைந்து குன்றும் குழியுமாகக் கிடக்கும் வீதியையே பயன்படுத்துகின்றார்கள்.

யானை வேலி அமைப்பதற்கான திட்டத்தின் கீழ் குறித்த இடங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்புரவு செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் யானைத் தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை.

அந்த இடத்தில் திரும்பவம் பற்றைக் காடுகள் வளர்ந்து விட்டன.

இத்தகைய போக்குக் குறித்து அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும்.'
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -