110 வருடங்களின் பின்னர் கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர கலைப்பிரிவு ஆரம்பித்து வைப்பு




ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் 110 வருடங்களின் பின்னர் கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப்பிரிவு முதன் முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் தங்கராஜா இதயராஜா தலைமையில் புதன்கிழமை 05.07.2017 நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே. துரைராசசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கலைப் பிரிவு ஆரம்ப முதல் தொகுதியில் சேர்ந்து கொண்ட 20 மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபரகணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு வகுப்புக்கள் தொடங்கின. பாடசாலை கலைப்பிரிவின் முதலாவது வகுப்புப் பொறுப்பாசிரியையாக தங்கராஜா ஜஜிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

1910ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது 29 ஆசிரியர்களுடன் 568 மாணவர்கள் கற்று வருகின்றார்கள்.

வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் தகரக் கொட்டிலிலும் மர நிழல்களின் கீழும் பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் கல்வி கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ளதாக அதிபர் இதயராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ரீ. ரவி, வாழைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என். குணலிங்கம், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -