திருகோணமலையில் 203 வது மெதடிஸ்த தின கொண்டாட்டம






திருகோணமலை சேகர மெதடிஸ்த தேவாலயம் சார்பில் திருகோணமலை மெதடிஸ்தமகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் . 01-07-2017 அன்று 203 வது மெதடிஸ்த தினகொண்டாட்டம் இடம்பெற்றது.

திரு வி. செகராஜசிங்கம் - திருகோணமலை இலங்கை வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர்,பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். திரு. வி பிரபாகரன் - அதிபர் வெஸ்லி கல்லூரி, கல்முனை / இலங்கை மெதடிஸ்த திருஅவையின் முன்னாள் துணைத் தலைவர், அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு திருகோணமலை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைக்குரு அருட் திரு கே ச நிஷாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மெதடிஸ்தமகளிர் கல்லூரி மாணவிகள் வரவேற்பு நடன நிகழ்ச்சி நிகழ்ச்சியை நடத்தினர்.

இலங்கை மெதடிஸ்த திருஅவையின் முன்னாள் துணைத் தலைவர் - டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன், சிறந்த புதிய கண்டுபிடிப்புக்காக மலேசியாவில் வெள்ளி பதக்கங்களை மற்றும் தேசிய விருது வென்ற இரு மாணவர்களையும் கௌரவப்படுத்தினார். மெதடிஸ்ட் மிஷினரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளிலிருந்து கல்வித்துறையில் சிறந்து விளங்கிய மாணவமாணவிகளுக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர்.

தலைமை விருந்தினரும் கௌரவ விருந்தினரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

கும்புறுபிட்டி மற்றும் ஜமாலியா பள்ளிகளில் இருந்து வந்த மாணவிகளால் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இறுதியில் திருகோணமலை மெதடிஸ்த சேகரத்தின் நிதி உக்கிரணகாரர் திரு பி டி தம்பிப்பிள்ளை நன்றி உரையாற்றினார்.


203rd Methodist Day Celebration in Trincomalee


Trincomalee Circuit of Srilanka Methodist Mission celebrated 203rd Methodist Day Celebration at Trincomalee Methodist Girls’ College on 01-07-2017.

Mr.V.Segarajasingam – Senior Manager, Bank of Ceylon, Trincomalee was the Chief Guest & Mr.V.Pirabaharan – Principal, Wesley College, Kalmunai / Former Vice President, Srilanka Methodist Mission; was the Guest of Honour.

Rev.K.S.Nishanthan – Superintentdent Minister, Trincomalee Circuit of Srilanka Methodist Mission, chaired the function & welcomed every one.

Methodist Girls College students performed the welcome Dance Programme Dr.E.G.Gnanakunalan - Former Vice President, Srilanka Methodist Mission, honored Two students from Kumpurupity School, who won the Srilanka National Award & Silver Medals in Malaysia for Best New Invention.

Students who performed Excellency in their studies from the Schools started by Methodist Missionaries were honored by giving Medals.

Chief Guest & the Guest of Honour were honored.

Dance Programmes were performed by School Children from Kumpurupity & Jamaliya Schools.

Mr.P.D.Thampipillai – Circuit Steward delivered the Vote of Thanks.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -