கிழக்கு மாகாண தமிழ்இலக்கியவிழா கல்முனையில் 31, 1 2களில்!

காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்ளத்தினால் வருடாந்தம்
நடாத்தப்பட்டுவரும் தமிழ்இலக்கிய விழா கல்முனைமாகரில் எதிர்வரும்
31ஆம் திகதியும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் 2ஆம் திகதிகளில் நடாத்தப்படுமென
கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

அது தொடர்பான முன்னேற்றக்கலந்தரையாடல் கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் மாகாண கலாசாரப்பணிப்பாளர் திருமதி
சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

அதன்போது இம்முறை விருதுபெறும் கலைஞர்கள் பெயர்விபரங்களையும் அவர் அறிவித்தார்.
சிறந்த தமிழ் இலக்கிய நூல் பரிசுகளை 9பேரும் கிழக்குமாகாண இளங்கலைஞர்
பாராட்டினை 10பேரும் கிழக்கு மாகாண வித்தகர் விருதபெறும் 10பேரினது பெயர்
விபரங்களை அமைச்சர் தண்டாயுதபாணி வாசித்து பிரகடனப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்
31ஆம் தகிதி காலை பாரிய பண்பாட்டுப்பபேரணியொன்று மருதமுனை அல்மனால் மகா
வித்தியாயலமுன்றலில் இருந்து ஆரம்பித்து கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை
வரை நடாத்தப்படவுள்ளது.

மேலும் ஆய்வரங்கு கவியரங்கு சிறப்புமலர் வெளியீடு மற்றும் விருது
வழங்கும் இறுதிநாள் விழாவும் கல்முனை மகுமூத் மகளரிர்கல்லூரி மற்றும்
உவெஸ்லிக்கல்லூரிகளில் நடைபெறும்.தமிழ்பேசும் இருஇனங்களின் பாரம்பரிய
கலாசார நிகழ்வுகள் அங்கு மேடையேறவுள்ளன. இவற்றுக்கான குழுக்கள் சிறப்பாக
ஒத்தழைக்கவேண்டுமென அன்பாகக்கேட்கின்றேன். என்றார்.

கூட்டத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்களான ஆர்.சுகிர்தராஜன்(திருக்கோவில்)
எம்.எஸ்.சஹதுல் நஜீம்(சம்மாந்துறை) எம்.எஸ்.ஜலீல்(கல்முனை) ஆகியோரும்
பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலாசார உத்தியோகத்தர்களும்
அதிபர்களும் கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -