விடுதலைப்புலிகளின் போரட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் 36 பேருக்கு நியமனம்

அஷ்ரப் ஏ சமத்-

விடுதலைப்புலிகளின் போரட்ட காலத்தில் பல்கலைக்கழக கல்வியை தொடாராது இயக்கத்தில் இருந்த முன்னாள் போரளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் பட்டதாரிகாளாக சோ்த்துக் கொள்வதற்காக புனா்வாழ்வு மீள்குடியேற்ற சிரைச்சசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இப்பட்டதாரிகளது விபரங்களை ஒன்று திரட்டி அமைச்சா் சமாப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தினை அமைச்சரவை அங்கீகரித்து நேற்று முன்தினம் இவா்களுக்கு கொழும்பில் உள்ள பொதுநிர்வாக முகாமைத்துவ அமைச்சில் நோ்முகப்பரீட்சை நடைபெற்றது. அதன் பினனா் இவா்கள் அமைச்சர் சுவாமிநாதனைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா் அத்துடன் மேலும் 20 பேர் விடுபட்டுள்ளனா் அவா்களையும் நியமன் பெற்றுத் தரும்படியும் தமது நியமனங்களை நாங்கள் வாழும் அந்த பிரதேச செயலாளா் கச்சேரிகளில் நியமத்தினை பெற்றுத்தரும்படியும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாங்கள் பல்கலைக்ககழங்களில் கல்வியைத் தொடாராது இயக்கத்தில் 2004,2006,2007 ஆண்டுகளில் இணைந்திருந்தோம் அதன் பின்னா் 2012 காலப்பபகுதிகளில் புனா்வாழ்வளிக்கப்பட்டு தமது பட்டப்படிப்பினை முடித்தும் கடந்த 2 வருடங்களாக தொழில் அற்று மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள அனைவரும் திருமணம் முடித்தவா்கள், அத்துடன் 35 வயதுக்கு மேற்பட்டோா். எங்களது நிலையறிந்து அமைச்சா் சுவாமிநாதன் அரசின் கவணத்திற்கு கொண்டுவந்து இவ் நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் போரளிகள் பட்டதாரிகள் சாா்பாக நாகேந்திரம் மரியயபெஸ்டியன் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -