கைகளை வெட்டிய 41 மாணவர்கள் - நடந்தது என்ன..?

பொலனறுவை மெதிரிகிரிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் காரணமின்றி 41 மாணவர்கள் தங்களது கைகளில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தரம் 10 மற்றும் 11 மாணவர்களில் ஒரு சிலர் முதலில் தங்கள் கைகளில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாகவும் பின்னர் ஏனைய சில மாணவர்களும் மாணவிகளும் அவர்களைத் தொடர்ந்து பிளேட் மற்றும் கூரிய கொம்பஸ் கருவிகளை பயன்படுத்தி தங்களது கைகளை காயப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறு மாணவர்கள் ஏன் கையில் வெட்டிக்கொண்டனர் எனும் தொடர்பில் உரிய காரணம் அறியப்படாத நிலையில், மாணவர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -