64 மில்லியன் ரூபாய் செலவிலான சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் நாளை வியாழக்கிழமை மக்கள் பாவனைக்குக் கையளிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட 63.08 மில்லியன் ரூபாய் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை 13.07.2017 இடம்பெறும் என்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகள், மீராவோடை பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் கடந்த ஆண்டின் 63.08 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளன.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 7 மில்லியன் ரூபாய் செலவில் வெளி நோயாளர் பிரிவுக் கட்டிடம் மற்றும் 10.4 மில்லியன் ரூபாய் செலவில் வைத்திய நிபுணர் விடுதி என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சுமார் 21 மில்லியன் ரூபாய் செலவில் ஒளடத களஞ்சியமும், பரிசோதனைக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.

மீறாவோடை பிரதேச வைத்தியசாலையில் 5.4 மில்லியன் ரூபாய் செலவில் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரூபாய் 20 மில்லியன் செலவில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாண சுகாதார அமைச்சர் முஹம்மட் நஸீர், விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -