தொழில்வாய்ப்புக்கள் தொடர்பில் பிஸிலங்கா 7 தொடக்கநிலை நிறுவனங்களுடன் கைச்சாத்து.



ல்வேறுபட்ட வித்தியாசமான துறைகளிலும் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளுக்கு இன, மத, மொழி, பிரதேச, அரசியல் வாதங்களுக்கு அப்பால் நின்று புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதையும், தொடக்கநிலை நிறுவனங்களை வலுப்படுத்துவதையும் பிரதான குறிக்கோளாக கொண்டு BusyLanka தனியார் நிறுவனமானது செயற்பட்டு வருகின்றது.

இறைவன் உதவியால், தேசிய ரீதியில் அதனது நடவடிக்கைகளை விஸ்தரிக்கவும் சர்வதேச சந்தையில் நுழையவும் என பல எதிர்கால திட்டங்களை தீட்டியுள்ள பிஸிலங்கா நிறுவனமானது அதனது முதலாவது பாரிய முயற்சியாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி 100 உள்ளக மற்றும் 1000 சுயதொழில் வாய்ப்புக்களை 2020 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கான 5 வருட திட்டமொன்றை வகுத்து கடின உழைப்புடன் அமைதியாக முன்னேறி வருகின்றது.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் 'பிஸிலங்கா' நிறுவனமானது, கடந்தவருடம் காத்தான்குடி பிரதேசத்தில் 'உலக அரங்கில் - நீங்கள் யார்..?' என்ற தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியினை “முஹாஸபா மீடியா“ ஏற்பாட்டில் நடாத்தியிருந்தது.

அதன் தொடராக கடந்தமாதம் மனிதவலு திணைக்களத்தின் அணுசரனையுடன் மட்டக்களப்பு, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேசங்களில் நடாத்தப்பட்ட தொழில் சந்தையில் கலந்து கொண்டு பொருத்தமானவர்களை நேர்முகம் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தனது பணிகளை மேலும் உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தனக்கு பக்கபலமாக செயற்படக்கூடிய 7 தொடக்கநிலை (Startup) நிறுவனங்களை 07.07.2017 முதல், தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை - MySoft-2U, RazGra, Witsberry, LeeNaa, ESL, Saja Furnitures, Aliyar Farm ஆகிய நிறுவனங்களுடன் நேற்று மேற்கொண்டிருந்தது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், பிஸிலங்கா வின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஸாஹிம் (மஸாகி) அவர்களுடன் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதையும், ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -