இறக்காமத்தில் பாதுகாப்பு படைவீரருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி உண்ணாவிரத போராட்டத்தில் -படங்கள்




ரெளஷான் -
றக்காமம் 1ம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கு சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் எஸ்.ரி.எம்.நியாஸ் தனது மேல் அதிகாரியினால் அனீதி இளைக்கப்பட்டுள்ளதாக கூறி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை  ஆரம்பித்துள்ளார்.

மேலும் 30 வருடங்களாக இடம் பெற்ற யுத்ததில் 17 வருடங்களாக யுத்தம் புரிந்து நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த அநீதி இளைக்கப்பட்டுள்ளது.

திடீர் சுகவீனமுற்று அம்பார பொது வைத்தியசாலையில் சிகிச்சை பேற்றிருந்தேன் பின்னர் வேலைக்கு சமூகமளிக்காத காரணத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டிருந்தது மீண்டும் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும் இங்கினியாகலையில் கையொப்பத்தை இடுமாறும் பணிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. இவருடைய இந்த செயற்பாடானது என்னை பழிவாங்குகின்றதாகவே அமைகின்றது.

யுத்ததினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர் ஆன என்னை வைத்திய நிபுனர்களால் 4 மணித்தியாலங்களுக் மேல் பணியில் ஈடுபடாக்கூடாது என்ற வைத்திய அறிக்கையும் உள்ளது.
இவ்வாறு இருந்தும் இந்த நல்லாட்சியில் இவ்வாறான உயர் அதிகாரிகள் இருப்பதை இட்டும் வேதனையடைகின்றேன் என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -