ஐ.தே.க – சீன கம்மியுனிஸ்ட் கட்சி களுக்கு இடையில் உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை –இம்ரான் எம்.பி


.தே.க – சீன கம்மியுனிஸ்ட் கட்சி களுக்கு இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை களை இரு இருகட்சிகளும் மேற்கொண்டு வருவதாக ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். அண்மையில் ஐக்கியதேசிய கட்சி குழுவினருடன் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளின் ஆளும் கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துவதே இவ்விஜயத்தின் பிரதான நோக்கமாகும். இவ்விஜயத்தில் சீன கம்மியுனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பல உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

அங்கு சீன அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விரிவாக் ஆராயப்பட்டது. சாத்தியமற்ற பல அபிவிருத்திகளும் அங்கு காணப்படும் பொருளாதார அபிவிருத்தியும் எவ்வாறு சாத்தியமானது என்று சீன அதிகாரிகளினால் பூரண விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறுபட்ட சமூகங்கள் வாழும் அங்கு சீன அரசு எவ்வாறு சமூக ஒற்றுமையை பேணி வேறுபட்ட சமூகங்களில் உள்ள மனித வளத்தை பயன்படுத்தி எவ்வாறு நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டுசென்றது என்பது பற்றி ஆராயப்பட்டது.

மேலும் இலங்கையில் சீன அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இஎதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இத்திட்டங்களினால் இரு நாடுகளுக்கும் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் மற்றும் இத்திட்டங்களின் உண்மைத்தன்மையை பொதுமக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகளும் ஆராய்ந்தோம்.

கட்சியை சீரமைத்து தொடர்ந்தும் வெற்றி பாதையில் கொண்டு செல்லவும், பல்லின சமூகம் வாழும் இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்தி எமது மனித வளங்களை பயன்படுத்தி எமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும், பல அபிவிருத்தி திட்டங்களை சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளவும் இவ்விஜயம் உதவும் என எதிர்பார்கிறேன் என தெரிவித்தார்.

ஐக்கியதேசிய கட்சி பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் காசிம் தலைமையில் அமைச்சர் சந்திராணி பண்டார ,பிரதி அமைச்சர் அனோமா கமகே, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா உட்பட தேசிய இளைஞர் முன்னணி அங்கத்தவர்கள் சிலரும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்


ஊடகப்பிரிவு-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -