சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்..



ஏறாவூர் நிருபர்-

 கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட குழு விளையாட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்தும் சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் - றகுமானியா மகா வித்தியாலய மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 03.07.2017 திங்கட்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்பிஎம்ஏ. சக்கூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏஎஸ். இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்எச்எம். நஸீர் . ஆசிரியர்களான யுஎல். றபியுதீன் மற்றும் ஏஜிஎம். றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வின்போது சாதனைபடைத்த மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களது பங்கேற்றலுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். பெற்றோல் நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் சந்தை வீதி வழியாகச் சென்று பாடசாலை வளாகத்தில் நிறைவடைந்தது.

இம்முறை நடைபெற்ற மாகாண மட்ட (20 வயதிற்குட்பட்ட) எறிபந்து போட்டியலும் கரம் போட்டியிலும் றகுமானியா மகா வித்தியாயலம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது. மேலும் (17 வயதிற்குட்பட்ட )எறிபந்து போட்டியில் 3 ஆம் இடத்தைத்தட்டிக்கொண்டது. இப்போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை 1 ஆம் இடத்தையும் மாக்கான் மாக்கார் மகா வித்தியாயலம் 2 ஆம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை (20 வயதிற்குட்பட்ட) எறிபந்து போட்டியில் பிரசித்தம்வாய்ந்த ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை 2 ஆம் இடத்தையும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை 3 ஆம் ஸ்தானத்தையும் பெற்றுக்கொண்டன.

திருகோணமலை விவேகானந்த வித்தியாயல மைதானத்தில் இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

மாகாண மட்ட எறிபந்து போட்டியில் ஏறாவூர் - றகுமானியா மகா வித்தியாயலம் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 2 ஆம் இடங்களையும் 15, 16 மற்றும் 17 ஆம் ஆண்டுகளில் செம்பியனாகவும் தெரிவாகியது.

கரம் போட்டியில் தொடர்ந்தும் 5 வருடங்கள் செம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துள்ளது. அதேபோன்று கிறிக்கெற் மற்றும் விளையாட்டுக்களிலும் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் தடம் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -