சில ஊடகங்கள் இனவாத்தினை தூண்ட முயற்சி செய்கின்றன - மத்திய மாகாண முதலமைச்சர்

க.கிஷாந்தன்-
நாட்டில் இன்று ஊடக நிறுவனங்கள் சகவாழ்வினை ஏற்படத்த முயற்சி செய்யும் போது ஒரு சில ஊடகங்கள் இனவாத்தினை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனித கப்ரியல் பெண்கள் பாடசாலையில் மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 180 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா முதலமைச்சர் தலைமையில் 11.07.2017 அன்று காலை 9.00 மணியளவில் கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட விடயம் தான் புதிய யாப்பு சீர்திருத்தம் இதனை வைத்துக்கொண்டு பௌத்த மதத்திற்குள்ள இடத்தினை இல்லாதொழிப்பதாகவும் நாட்டை பிரிப்பதாகவும் செய்திகளை பரப்பி இனவாதத்தினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுகின்றன.

ஆனால் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தெளிவாக தெரிவித்திருக்கிறார் பௌத்த மதத்திற்குள்ள எந்த இடத்தினையும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என்று இந்த நாட்டில் இரண்டு சீர் திருத்தங்கள் நடைபெற்றன. ஒன்று 1972, 1978 ஆகிய சீர்திருத்தங்களின் போதும் பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று நடைபெறும் சீர் திருத்தத்திலும் பௌத்த மதத்தில் எந்த மாற்றம் நிகழப்போவதில்லை. ஜனாதிபதியின் ஒரே நோக்கம் ஒன்றுபட்ட நாட்டிக்குள் இருந்து கொண்டு சகவாழ்வினை முன்னெடுக்கின்றோம். சகவாழ்வுக்கு நல்ல எடுத்துக்காட்டு இந்த பாடசாலையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -