மட்டக்களப்பில் சுமார் ஆயிரம் இளைஞர் யுவதிகள் உற்பத்தித் தொழிற் துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர் யுவதிகள் உற்பத்தித் தொழிற் துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறிகள் பற்றிக் கேட்டபோது செவ்வாய்க்கிழமை 04.07.2017 அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர்ளூ ஏதாவதொரு உற்பத்தித் துறையில் தமக்கு பயிற்சிகள் தேவை என்ற வேண்டுகோள் சுயதொழில் உற்பத்தித் தொழில்துறையில் ஆர்வம் காட்டுவோரால் கூட்டாக முன்வைக்கப்படுமாயின் அவர்கள் தெரிவு செய்யும் தொழில் துறைகளுக்கான பயிற்சிகள் இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழி;ப்புப் பிரிவினால் இலவசமாகவே வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இது ஒரு அரிய வாய்ப்பு, இதனை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர் யுவதிகளும் உற்பத்தித் துறை சார்ந்தோரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உள்ளுரில் தாராளமாக மூலப் பொருள் கிடைக்கின்றபோதும் அதுபற்றிய அக்கறையில்லாது நாம் பொதுவாக வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களின் நுகர்வோராக இருப்பதால் எமது பொருளாதாரமும் வளமும் வீணடிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பால் கிடைக்கின்ற போதிலும் வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாலுணவுகளின் நுகர்வோராக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உள்ளார்கள்.

அதேபோன்று ஏனைய அரிசி மாப்பொருள் உற்பத்திகள், உப உணவு உற்பத்திப் பொருட்கள், மாசி, கடலுணவு மற்றும் சவர்க்காரம் உட்பட அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பாவனைக்கான பொருட்களின் அநேகமான மூல வளங்கள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கின் அநேக பகுதிகளில் கிடைக்கின்றன.

ஆயினும் வெளியூர்களிலிருந்து அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நுகரும் மோகம் இன்னமும் நம்மை விட்டு அகலவில்லை.

இதனை மாற்றுவதற்காகவே இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவு உள்ளுர் வளங்களைக் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை உருவாக்கும் பயிற்சி நெறிகளை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

மூலப்பொருள்களை முடிவுப் பொருள்களாக மாற்றி அதற்கான சந்தை வாய்ப்பையும் சிறந்த இலாபத்தையும் பெற்றுக் கொள்ள வழிகாட்டப்படுகின்றது.

உள்ளுரில் போதிய வளங்கள் இருந்தும் மட்டக்களப்பு மாவட்ட மக்களில் 80 சதவீதமானோர் வறுமைக்குட்பட்டவர்களாக அடையாளங் காணப்பட்டிருக்கின்றார்கள்.

இதுபற்றி இளைஞர் யுவதிகள், உற்பத்தித் துறைசார்ந்தோர், சமூக ஆர்வலர்கள் பொது நிறுவனங்கள் அக்கறை காட்டி உள்ளுர் வளங்களைக் கொண்டு அதி உச்ச பயனடைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

இதேவேளை தேசிய மொத்த உற்பத்திக்கான பங்களிப்பில் கிழக்கு மாகாணம் 7.8 வீதத்தையும் வடமாகாணம் 4.2 வீதத்தையும் மாத்திரமே அளிக்கின்றன.

தேசிய மொத்த உற்பத்திக்கான பங்களிப்பில் இலங்கையில் ஆகக் கூடிய 46 வீதம் என்கின்ற பங்களிப்பை மேல் மாகாணம் எட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -