சிறந்த தேசிய உணவு உற்பத்தியாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு..!

அப்துல்சலாம் யாசீம்-
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சிறந்த தேசிய உணவு உற்பத்தியாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு இன்று (21) கன்தளாயில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட விவசாயிகளுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுவரையில் நிலையான ஒரு செயற்திட்டம் இல்லாத காரணத்தினால் அவற்றை மேம்படுத்தும் நோக்கில் ஜயாயிரம் மில்லியன் ரூபாய் நிதியை எதிர்வரும் மூன்று வருடத்திற்குள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் முதல் கட்டமாக அதில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி இவ்வருடம் ஒதுக்கப்பட்டு பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் அவர் மேலும் உரையாற்றுகையில்;

காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் தேசிய பொருளாதாரம் நேரடியாக பாதிப்புக்கு உற்படுகின்றது.பல்வேறு நாடுகளும் இதன் பாதிப்புக்கு உற்பட்டுள்ளன. அதிக வரற்சி காரணமாக மக்கள் பல அசௌகங்கரியங்களை எதிர் கொள்வதாகவும் நாட்டினுடைய நெல் உற்பத்தி நூற்றுக்கு ஜம்பது வீதம் வரற்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் பர்மா- பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து மக்களுக்கு அவற்றை நியாய விலையில் வழங்கவுள்ளதாகவும் நிவாரண செயற்பாடுகளுடன் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடு முன்னெடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகம் -திருகோணமலை மாவட்ட செயலகம் ஏனைய ஜந்து அமைச்சுக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க.தயா கமகே. மகிந்த அமரவீர- கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம. ஊவா மாகாண ஆளுனர் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி- கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்- திருகோணமலை மாவட்ட பாராள மன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப். கே.துறைரெட்ணசிங்கம் கிழக்கு மாகாண அமைச்சர்கள்-அரச உயரதிகாரிகள் விருது பெரும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -