சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் துண்டு பிரசுரம்..!

க.கிஷாந்தன்-
சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் பல்கலைகழக மாணவர்கள் பொது மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். 22.07.2017 அன்று மதியம் இந்த நடவடிக்கையில் 25ற்கும் அதிகமான பல்கலைகழக மாணவர்கள் வியாபார ஸ்தலங்களுங்கு சென்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதியிலும் இந்த துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.

அதேவேளை கை ஒலிபெருக்கி ஊடாக சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் ஒலிபெருக்கினர். மேலும் அரசாங்கம் சைட்டத்தை மூட வேண்டும், கல்வியை தனியார் மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும், மலையக பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் தளபாடங்கள் பற்றாக்குறை நிலவுப்படுகின்ற போது அவற்றை கவனிக்காது ஒரு சில தனிபட்ட வளர்ச்சிக்காக செயற்படுவதை தவரிக்க வேண்டும் போன்ற தெளிவூட்டல்களை இதன்போது தெரிவித்தனர்.

அத்தோடு ஒரு சிலரின் சுயநலனுக்காக சைட்டம் திட்டம் நடைமுறைப்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் வைத்தியத்துறை வியாபாரமயமாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் சைட்டம் திட்டத்தினால் வைத்தியத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யபட்டமை குறிப்பிடதக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -