பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் வளாத்தில் பெண்கள் தொழுவதற்கான பள்ளிவாசல் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக் கடமையாற்றும் மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.முகர்றப் தனது சொந்த நிதியில் இந்தப் பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
தனது தந்தையான அதிபர் மர்ஹூம் எம்.எம்.இஸ்மாயில் மற்றும் தனது தாயின் தந்தையான மஸ்ஜிதுந்நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னாள் தலைவர்; மர்ஹூம் எஸ்.எம்.இப்றாஹிம்; ஆகியோரின் நினைவாக 15 இலட்சம் ரூபா செலவில் இந்தப் பள்ளிவாசல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
நிர்மானிக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் ஆவணங்களை எம்.ஐ.எம்.முகர்றப் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து மஸ்ஜிதுந்நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன் மற்றும் நிர்வாகிகளிடம் அண்மையில் கையளித்தனர். மருதமுனை வரலாற்றில் பெண்களுக்குத் தனிப் பள்ளிவாசல் நிர்மானித்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.