க.கிஷாந்தன்-
அக்கரப்பத்தனை போபத்தலாவ மெனிக்பாலம பகுதியிலிருந்து மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் ஆகரஓயா ஆற்றில் கறுப்பு நிறத்தில் நீர் செல்வதனால் ஆற்றை பாவிக்கும் அப்பகுதி மக்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
தேயிலை தொழிற்சாலை அல்லது கால்நடை பண்ணைகளிலிருந்து இவ்வாறு கழிவுகளை ஆற்றில் கொட்டுவதாக நீரை பாவிக்கும் மக்கள் குற்றம்சுமத்துகின்றனர். இதனால் கறுப்பு நிறத்தில் நீர் வருவதாகவும் சூழல் மாசடைவதாகவும் நீரை பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த பிரதேச மக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.