மட்- மம- ஓட்டமாவடி தேசிய பாடசாலை அண்மையில் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது.

ஓட்டமாவடி நிருபர் அ.ச.முகம்மது சதீக்-

ற்போது மட்- மம ஓட்டமாவடி தேசிய பாடசாலையிக்கு 120 ஒ95 அடியிலான கலையரங்கு கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன .இக்கலையரங்கு கட்டிடம் இப்பாடசாலையின் நூற்றாண்டுகள பழமை வாயந்த மைதானத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் பாதிக்கும் என்ற அடிப்படையிலும் மற்றும் மைதானத்தின் பரப்பளவை குறைக்கும் ஆனால் இக்கலையரங்கை இம்மைதானத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கலையரங்கை கட்டுவதற்கு இடம் உள்ளது என்றும் இக்கலையரங்கு கட்டிடத்தை இப்பாடசாலையின் தொழிநுட்ப ஆய்வுகூடத்துக்கு அருகாமையில் இக்கட்டிட வேலைகளை ஆரம்பிக்குமாறு மாணவர்கள் மட் ஓட்டமாவடி தேசிய பாடசாiயின் அதிபர் ஹலீம் இஸ்ஹாக் அவர்களுக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர்

இப்பாடசாலையின் புறக்கிருத்திய செயற்பாடுகளுக்கு இம்மைதானம் மிகவும் பிரதானமானது அது மாத்திரமல்லாது மாணவர்களின் உடலியற்க்க திறன்கள் குறைவடைந்து வருவதனை அவதானித்த கல்வி அமைச்சு ; மாணவர்களுக்கான உடற்பயிற்சி ,விளையாட்டை அதிகரிக்க அண்மையில் வலியுறுத்தியிருந்தது இப்பாடசாலையில் விளையாட்டு நிகழ்ச்சிகள் சாரணர் இயக்கம் கடெட் படை முதலுதவி மற்றும் ஏனைய இதர செயற்பாடுகளுக்கும் இம்மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது .இம்மைதான விளையாட்டு செயற்பாடுகள் மூலம் இப்பாடசாலை மாணவர்கள் மாகாண மட்டம் தேசிய மட்டம் வரை தமது திறமைகளை நிருபித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலைக்கு பல அபிவிருத்தி திட்டங்கள வருகின்ற போது இம்மைதானத்தின் பரப்பளவு குறைவடைந்து இப்பாடசாலையில் சில குறிப்பிட்ட மைதான நிகழ்ச்சிகள் மாத்திரம் நடைபெறும் அல்லுத இம்மைதானம் பாடசாலையின் முற்றமாக மாற்றம் பெறும் சந்தர்ப்பத்தில் இப்பாடசாலை மைதானத்திற்கான மாற்று காணிகள் பாடசாலைக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி சகலருக்கும் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -