கிழக்கின் புதிய ஆளுநராவது தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வாரா..?

ரோஹித போகொல்லாகம அவர்கள் 2001 தொடக்கம் 2004 ஆண்டு வரை இருந்த ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் கைத்தொழில் அமைச்சராக இருந்து, நோர்வே மத்தியஸ்தத்தில் ரணில் – பிரபா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பக்கபலமாக இருந்தவர்.

ஜெனிவாவில் இடம்பெற்ற புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இறுதி இரண்டு சுற்றுக்களில் 2006 ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றவர்.

தற்போதைய நிதியமைச்சர் மங்கள அவர்களை வெளிநாட்டு விவகார அமைச்சரிலிருந்து முரண்பாடுகளால் 2007 களில் நீக்கிய மஹிந்த ராஜபக்ஷ, ரோஹித போகொல்லாகம அவர்களையே நியமனம் செய்தார். அவர் யுத்த காலமான 2007 தொடக்கம் 2010 வரை வெளிநாட்டு விவகார அமைச்சராக இருந்தார்.

இலங்கை ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையகத்தில் முகம்கொடுத்த மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்தவர்களில் மஹிந்த சமரசிங்க அவர்களும் ரோஹித போகொல்லாகம அவர்களும் மிக முக்கியமானவர்கள்.


அதிலும் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலங்களில் ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதில் வெளிநாட்டு விவகார அமைச்சராக ரோஹித போகொல்லாகம பங்கையாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி இனப்பிரச்சினை விடயங்களில் நேரடியாகப் பங்களிப்புச் செய்து அனுபவமுள்ளவர் என்ற அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கல் சம்மந்தமாக ஒரு புரிந்துணர்வோடு நடந்து கொள்ள அவர் எத்தனிக்க வேண்டும்.

ஆகக்குறைந்தது 13 ஆவது சரத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் தடையாகவேனும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

தமிழ் பேசும் மக்களின் ஆகக்குறைந்த இந்த எதிர்பார்ப்பை இப்புதிய ஆளுநராவது நிவர்த்தி செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி:
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -