ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட கந்தளாய் பகுதியில் பிரதான நீர் சேவை தடங்களில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணத்தினால் நீர் வெட்டு ஏற்படுத்தப்படவிருப்பதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை திருகோணமலை பிராந்திய காரியாலயத்தின் மாவட்ட பொறியியலாளர் வீ.சதீஸ் தெரிவித்தார். இவ் நீர் வெட்டு கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை நகர பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் எதிர்வரும் 01.08.2017 தொடக்கம் 04.08.2017 வரை அமுலில் நீர் வெட்டு செய்யப்படும் என தெரிவித்தார்.
எனவே பொது மக்கள் தங்களுக்கு தேவையான நீரினை சேமித்து வைக்குமாறு மேலும் மக்களை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் வீ.சதீஸ் கேட்டுள்ளார்.