யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா தக்கியத்துன் நூர் பள்ளிவாசலுக்கு நஷ்டஈடு வழங்கி வைப்பு


ஆர்.ஹஸன்-

யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, துறையடி தக்கியத்துன் நூர் பள்ளிவாசல்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபா நஷ்டஈட்டு தொகைக்கான காசோலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால், கிண்ணியா துறையடி தக்கியத்துன் நூர் பள்ளிவாசல் தலைவர் ஏ.ஜி.எம்.ஜிஹாதிடம் கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து இன்று புதன்கிழமை மேற்படி நிதி கையளிக்கப்பட்டது. இதன்போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் றயிஸ{த்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

யுத்த காலப் பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்ட துறையடி தக்கியத்துன் நூர் பள்ளிவாசல் மிகவும் மோசமான நிலையில் இயங்கி வந்தது. இந்நிலையில், இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து தனது அமைச்சினால் யுத்தம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு தொகையைப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். 

அதற்கமைய குறித்த பள்ளிவாசலுக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டஈட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்நிதி மூன்று கட்டங்களாக வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபா தற்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -