க.கிஷாந்தன்-
நாடாளவிய ரீதியில் இந்துக்களால் ஆடிப்பூர விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாவாகும்.
அந்தவகையில் அட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா 26.07.2017 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்துக்களின் கலாச்சார மேளதாளம் முழங்க பெருந்திரளான அடியார்கள் பால்குடங்களை ஏந்தியவாரு பால்குட பவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றது. இந்த விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.
பால்குட பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு அட்டன் பிரதான வீதியினூடாக மணிகூட்டு கோபுரம் வரை சென்று மீண்டும் இரண்டாவது பிரதான வீதியினூடாக ஆலயத்தை வந்தடைந்தது.
ஆடி மாதத்தில் ஆடிப் பெருக்கை தொடர்ந்து ஆடிப்பூர விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு ஆடை முதல் அணிகலன் வரை சீர்வரிசையாக கொண்டு செல்லப்பட்டு பக்தி உணர்வுடன் அம்மனுக்கு சாத்தி வழிபடும் நாளாகவும் இந்த ஆடிபூரத்தை இந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.