கணியவள எண்ணெய் ஊழியர்களின் போராட்டத்தால் மலையகத்திற்கு பாதிப்பில்லை..!

க.கிஷாந்தன்-
ணியவள ஊழியர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 24.07.2017 அன்று நள்ளிரவு 12.00 மணி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் மலையகப்பகுதியில் வாகனப்போக்குவரத்துக்கு பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. அட்டன், கொட்டகலை, தலவாக்கலை பிரதேசங்கள் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான டீசல் மற்றும் பெற்றோல் காணப்படுவதாகவும் இதனால் இன்னும் இரண்டு நாளைக்கு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியுமெனவும் எரிபொருள் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போ பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு போதிய எரிபொருள் கைவசம் இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்குள் பிரச்சினை தீர்க்கப்படா விட்டால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் இந்த தொழிற்சங்க போராட்டம் அநீதியானது எனவும் அட்டன் டிப்போவின் போக்குவரத்து அதிகாரியொருவர் தெரிவித்தார். 

மலையகப்பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்காக தியத்தலாவை, நுவரெலியா, உட்பட பல இராணுவ முகாம்களிலிருந்து கொட்டகலை தொகைச்சாலையில் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் செய்ய முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் மேலதிகாரிகளின் கட்டளைப் பிறப்பிக்கப்படாமையினால் இரண்டு மணிமுதல் தொகைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். எனினும் சுமார் 5 மணி வரை எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை 24.07.2017 அன்று கொட்டகலை தொகைச்சாலையில் எண்ணெய் பௌசர் ஒன்று எண்ணெயினை இறக்க முடியாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளதுடன் 26.07.2017 அன்று அதிகாலை புகையிரத கொள்கலன்களில் வந்த எரிபொருளும் கொள்கலனுடன் கொட்டகலையில் தரித்து வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -