இன்னும் ஒருவருடத்துக்குள் கல்முனையில் ஒரு மைதானத்துக்கு மின்னொளி வசதி செய்து தரப்படும் றவூப் ஹக்கீம்!!!







எம்.வை.அமீர் யூ.கே.காலிதின்-

தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள பல விளையாட்டு மைதானங்கள் இருக்கின்ற போதிலும் கல்முனையில் அவ்வாறான வசதியுள்ள மைதானங்கள் இல்லாதது மிகுந்த குறையாகும். இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இன்னும் ஒரு வருடத்துக்குள் கல்முனையில் பொருத்தமான ஒரு விளையாட்டு மைதானத்துக்கு மின்னொளியில் விளையாடக்கூடிய வசதிகள் செய்து தரப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில்“லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த கிண்ணம் 2017” கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி 72 விளையாட்டுக்கழகங்கள் தொடராக 6 நாட்கள் 5 ஓவர்களைக் கொண்ட 7 வீரர்கள் பங்குகொண்ட போட்டியின் இறுதி நாளான 2017-07-09 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் றவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த வசதி, கிறிக்கட் விளையாடுவதற்கு வசதியான கல்முனையில் உள்ள ஒரு மைதானத்துக்குச் செய்து தருவதாகவும் அதேவேளை இந்தவருடம் கல்முனை கடற்கரை பள்ளியில் இருந்து சாய்ந்தமருது பூங்கா வரையான, கடற்கரை பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்துக்குள் சாய்ந்தமருது பௌஸி ஐக்கிய விளையாட்டு மைதானத்தையும் புனரமைத்துத் தருவதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு அம்பாறை கச்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கல்முனை லேசன்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் நிந்தவூர் றியல் இம்றான் விளையாட்டுக்கழகம் என்பன தெரிவாகி இருந்தன. அதேவேளை வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசில்களும் அறிவிக்கப்பட்டிருந்தன

போட்டியில் நிந்தவூர் றியல் இம்றான் விளையாட்டுக்கழகம் “லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த கிண்ணம் 2017” ஐ தனதாக்கிக்கொண்டது. இதன்போது அமைச்சர் றவூப் ஹக்கீம் வெற்றிபெற்ற அணிக்கு 50000.00 ரூபாவையும் மற்றைய அணிக்கு 25000.00 ரூபாயையும் வழங்கி வைத்த அதேவேளை நிகழ்வின் கௌரவ அதிதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் வெற்றிபெற்ற அணிக்கு கடினபந்து விளையாட்டு உபகரணங்களையும் மற்றைய அணிக்கு மென்பந்து உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.

நிகழ்வின்போது கிழக்குமாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன் மற்றும் ஏ.எல்.தவம் ஆகியோர் பிரசன்னமாகி இருந்த அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் யஹ்யாக்கான் பௌண்டேசனின் தலைவரும் நிகழ்வின் அனுசரணையாளர்களில் ஒருவருமான ஏ.சி.யஹ்யாக்கான் மற்றும் கல்முனைப் பிராந்திய உளநல வைத்திய அதிகாரியும் அர்ஷத் பௌண்டேசனின் தலைவரும் அனுசரணையாளர்களில் ஒருவருமான வைத்திய கலாநிதி அர்ஷத் காரியப்பர் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிச் சின்னங்களை வழங்கிவைத்தனர்.

மின்னொளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -