நம்பிக்கையோடு முயற்ச்சி செய்யுங்கள் முன்னேற முடியும் - அமைச்சர் டெனிஸ்வரன்.



காரைதீவு நிருபர் சகா-

டமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017 ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும், தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் இன்று 07.07.2017 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் நாவலர் வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில், யாழ்ப்பாண மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் இதுவரையில் 1360 பேருக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் 5 மாவட்டங்களிலும் இருந்து ஒரு மாவட்டத்திற்கு 60 பயனாளிகள் வீதம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மூலமாக வாழ்வாதார செயற்ப்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு சரியான திட்டத்தினை தெரிவு செய்வது சம்மந்தமாக நேர்முகத்தேர்வுகளும் நடாத்தப்பட்டதுடன் அவர்களினால் தெரிவுசெய்யப்பட திட்டங்கள் பதிவுசெய்யப்பட்டு நிதி ஆணைக்குழுவின் ஒப்புதலை பெறுவதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.

அந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அமைச்சர் டெனிஸ்வரன் கலந்துகொண்டு பயனாளிகளை அறிவுறுத்துகையில், எமது இனத்தின் விடிவிற்காக பாடுபட்ட பல முன்னால் போராளிகள் ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருவதாகவும், சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குகூட தள்ளப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் அறியக்கிடைப்பதாகவும், அவ்வாறான நிலையினில் அவர்கள் காணப்படுவார்களானால் அவர்கள் பற்றிய விபரங்களை தனக்கு அல்லது தனது கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மூலமாகவும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டதோடு, பல தம்பி தங்கையர் தமது உறவினர்களை கண்காணிப்பதற்காக தமது கல்வியினை இழந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார், மேலும் பொதுமக்கள் தாங்கள் வாழுகின்ற பகுதிகளில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட உறவுகள் குறிப்பாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்றாட வாழ்கையினை சுயமாக நடாத்த முடியாதவர்கள் காணப்படின் அவர்கள் குறித்தும் தனக்கோ அல்லது தனது திணைக்களத்திற்கோ தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார், குறிப்பாக அவர்களுக்கான உதவிகளை தம்மால் முயர்ச்சிக்கப்படும் வெளிநாட்டு தூதரகங்கள் ஊடன உதவித்திட்டங்கள் வாயிலாக பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் பயனாளிகளை அறிவுறுத்துகையில் முயற்சி இருந்தால் முன்னேற முடியுமென தெரிவித்துள்ளதோடு, அவர்கள் தமக்கு ஏற்புடைய உதவித்திட்டங்களை பெற்றுக்கொண்டு அதன்மூலம் நம்பிக்கையோடு முயற்சி செய்தால் அதிக வருவாயினைப் பெற்று வினைத்திறன் உடையதாக மாற்றிக்கொள்ள முடியுமெனவும், கடந்த காலங்களில் உதவித்திட்டங்களை பெற்ற பலர் அயராத முயற்ச்சியால் மாதாந்தம் 25000 ரூபா வரையில் வருமானம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டியதோடு அவற்றின் மூலம் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு நல்லதொரு கல்வியினை வழங்கவேண்டுமென்றும் அதுவே எமது சமூகத்திற்கான நிலையான சொத்து எனவும் அறிவுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -