பயங்கரவாதத்துக்கு சவூதி ஒருபோதும் துணைபோகாது! காத்தான்குடியில் சவூதி இளவரசர்





எம்.வை.அமீர்,எஸ்.ஜனூஸ்-
லகை, பயங்கரவாதம் அடக்கியாள நினைக்கிறது. இவ்வாறான சூழல் நாம் வாழும் இந்தபுமியை மிக ஆபத்தில் தள்ளிவிடுவது மட்டுமல்லாது எதிர்கால சந்ததிகளின் இருப்பையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்றும் பயங்கரவாதிகளுக்கும் பயன்கரவாத்தத்துக்கும் சவூதி அரேபியா ஒருபோதும் துணைபோகாது என்றும் சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் தெரிவித்தார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இளவரசர் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், தனது பயணத்தின் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடிக்கும் 2017-07-23ஆம் திகதி வருகைதந்திருந்தார்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இளவரசர் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.

பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பயங்கரவாதம் மிகுந்த அச்சுறுத்தலான ஒன்று என்றும், பயங்கரவாதத்தின் தாக்கங்களை, அனுபவங்களை உணர்ந்த இலங்கை மக்கள் அதிலிருந்து விலகி இருப்பதையே விரும்புவார்கள் என தான் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

சவூதி இளவரசரின் இலங்கை விஜயத்தின் இணைப்பாளராக இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா செயற்பட்டிருந்தார்.

இளவரசரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை சந்திப்பதுடன் இலங்கையில் முதலீடுகள் செய்வது குறித்தும் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -