கிண்ணியா மாஞ்சோலையில் புதிதாக கரையோர வீதி நிர்மாணம்..!

க்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் வேண்டுகோளுக்கினங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் திட்டமிடல் பொருளாதார விவகார அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கிண்ணியா மாஞ்சோலையின் கரையோர பகுதியில் புதிதாக காபட் வீதியோன்று அமைக்கப்படவுள்ளது.இவ்வீதியின் நிர்மானப்பநிகளுக்கென மூன்று கோடியே அறுபத்து நான்கு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிறு )காலை வீதி அமைக்கப்படவுள்ள பகுதியை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா பிரதேச செயலாளர், கிண்ணியா நகர சபை செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

இப்பகுதியை சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் கடந்த காலங்களில் வீதிகள் அமைக்கப்பட்ட போதும் இப்பகுதி கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகள் காரணமாக அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் கைவிடப்பட்டதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதன்பின் புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இம்ரான் மகரூபிடம் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கினன்கவே இவ்வீதி அமைக்கப்படவுள்ளது. இவ்வீதி அமைக்கப்படுவதன் மூலம் கிண்ணியா பிரதான வீதியில் காணப்படும் வாகன நெரிசலை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்பது குறுப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -