யூ.கே.காலிதின்எ,ம்.வை.அமீர் -
1989/90 ஆண்டு காலப்பகுதியில் இப்பாடசாலை இப்பிராந்தியத்தில் பிரபல்யமான பாடசாலையாக காணப்பட்டது. இப்பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பதென்றாலே கடும் சிரமமாக இருந்தது. அக்காலப் பகுதியில் என்னோடு சேர்த்து 25க்கு மேற்பட்ட மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றனர் அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தினையும் பெற்று ஜப்பான் நாட்டுக்கும் சென்றுவந்தனர் என்பதை கூறுவதில் பெருமைப்படுகின்றேன் என சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளரும் இப்பாடசாலின் அபிவிருத்தி சங்கச் செயலாளருமான எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.
கல்முனை வலயக்கல்விக்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் காரியால அலுவலகத்திற்கு தணவந்தர்களின் உதவியோடு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2017-07-27 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதய நிலமையைப்பார்க்கின்ற போது மனவேதனையாக இருக்கின்றது. எமது காலப்பகுதியில் பாடசாலை எவ்வாறு இருந்ததோ அவ்வாறான முன்னேற்றத்திற்கு கொண்டுவர தன்னாலான சகல முயற்சிகளையும் செய்வேன் எனவும் அது மாத்திரமல்லாமல் இப்பாடசாலையின் அதிபர் தொடக்கம் சிற்றூழியர் வரை அர்பணிப்புடன் செயற்படுவோமேயானால் மாத்திரமே நாம் இப்பாடசாலையை முன்னேற்றமுடியும், மாறாக தானும் தனது வேலையுமாக செயற்படுவோமாக இருந்தால் நாம் நமக்கு மாத்திரமல்ல எமது சமூகத்திற்கும் பாரிய துரோகத்தினை செய்கின்றோம், அதன் விளைவு நமது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை இவைகளை கருத்திற்கொண்டு இறை அச்சத்துடன் செயற்படுவோமயானால் பெறுபேருகள் சிறந்ததாக அமையும் என்பதை தங்களுக்கு கூறிக்கொள்கின்றேன்.
எனது பிள்ளையை இப்பாடசாலையில் சேர்க்கும் போது எனது வீட்டில் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது அவைகளை ஒரு புறம் தள்ளிவிட்டு நான் கற்ற பாடசாலையை முன்னேற்ற வேண்டும் என்கின்ற அவாவுடன் செயற்பட முன்வந்தேன். அது மாத்திரமல்ல இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் திணைக்களத்தின் தலைவர்களாகவும், நிறைய தனவந்தர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களது உதவிகளை நாடினோம் அவர்களும் உதவினார்கள். இன்று நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதநேரம் மாணவர்களுக்கு ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறேன் ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது, அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது துனிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது என்கின்ற எண்ணத்தோடு செயற்படுவோமேயானால் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக மாற முடியும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலத்தின் உதவி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.ஜகான்கீர், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ. ரஹ்மான், உதவி ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹரூன் உட்பட பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்திய பரீட்சையில் சிறந்த பெருபேர்களை பெற்ற மாணவர்களுகளை பாராட்டி அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.