உள்ளுராட்சி மன்ற நிதி உதவியாளர்களை கணக்காளர்களாக நியமிக்க வேண்டும் - உதுமாலெப்பை

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் கணக்கு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட நிதிஉதவியாளர்களை பதில் கணக்காளர்களாக அல்லது உள்ளுராட்சி மன்ற கணக்காளர்களாக நியமிக்க வேண்டும் எனஎதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாண சபையின் 80வது அமர்வு (18) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போதுகிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் கணக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நிதிஉதவியாளர்களை பதில் கணக்காளர்களாக அல்லது கணக்காளர்களாக நியமிக்க கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினைசமர்ப்பித்து உரையாற்றுகையிலே அவர் மேற்படி கோரிக்கையினை சபையில் முன்வைத்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் கணக்குப்பிரிவில் நீண்டகாலமாக நிலவிவந்த கணக்காளர்களுக்கானபற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமுகமாக கணக்கியல் துறையில் விசேட பட்டம் பெற்ற அபிவிருத்திஉத்தியோகத்தர்களை உள்ளுராட்சி மன்றங்களில் கணக்குப்பிரிவில் நியமித்தலுக்காக கிழக்கு மாகாணப் பொதுச்சேவைஆணைக்குழுவினால் சென்ற 2013.10.21ல் விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2014 ஜனவரி மாதத்தில் நியமனங்களுக்கானநேர்முகத்தேர்வுகள் நடைபெற்று 2014.03.10 முதல் செயற்படும் வண்ணம் பல்வேறு திணைக்களங்களிலும்கடமையாற்றிவந்த கணக்கியல் துறையில் விசேட பட்டம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளுராட்சிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களின் திறமையான செயற்பாடுகள் காரணமாக உள்ளுராட்சி மன்றங்களின் நிதிச்செயற்பாடுகள் இன்றுவரைசிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடங்களுக்குமான வரவு செலவுத்திட்டம், நடைபெற்று முடிந்தவருடங்களுக்கான இறுதிக் கணக்கறிக்கைகள் அனைத்தும் காலதாமதமின்றி இவர்களால் தயாரிக்கப்பட்டுஉரியவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அதுமாத்திரமின்றி இன்று இவர்களின் திறமையான செயற்பாடுகாரணமாககணக்காய்வு ஐயவினாக்களும் வெகுவாக குறைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் வருமானங்கள், செலவு நடவடிக்கைகள் ஆகிய இரண்டு துறைகளுக்கும்இவர்கள் பொறுப்பாவதுடன் நிலுவைகளை சேகரித்தலிலும் மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் வினைத்திறனாகசெயற்படுகின்றனர். 

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் கடிதத்தின் படி இவர்களது பதவிப் பெயர் நிதி உதவியாளர்களாகமாற்றப்பட்டது. கணக்கியல் துறையில் விசேட பட்டம்பெற்று ஏற்கனவே அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள இவர்களது பதவிப்பெயரானது (நிதி) உதவியாளர்களாக மாற்றப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டின் மூலம்தங்களது பதவியானது குறைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் மிகவும் மனவேதனையடைகின்றனர்.

எனவே கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் கணக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நிதிஉதவியாளர்களை பதில் கணக்காளர்களாக அல்லது உள்ளுராட்சி மன்ற கணக்காளர்களாக நியமிக்க வேண்டும்எனக்குறிப்பிட்டார்.

இந்தவிடயமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில்;

உள்ளுராட்சி மன்றங்களின் கணக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நிதி உதவியாளர்களை பதில்கணக்காளர்களாக அல்லது உள்ளுராட்சி மன்ற கணக்காளர்களாக நியமிப்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேசிஇதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -