சர்வதேச இளைஞர் பரிசளிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சுடன் புதிய உடன்படிக்கை.!

ஐ.ஏ.காதிர் கான்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின,; தேசிய இளைஞர் பரிசளிப்பு பிரிவு வழிநடத்தும், எடிம்ரோ கோமகன் சர்வதேச இளைஞர் பரிசளிப்பு நிகழ்ச்சித்திட்டம், நாடு பூராகவும் உள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் செயற்படுத்துவதற்காக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டது. 

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு சார்பில் செயலாளர் திரு.எம்.ஐ.எம்.ரபீக் அவர்கள,; மற்றும் கல்வி அமைச்சு சார்பில் செயலாளர் திரு.சுனில் ஹெட்டிஆராட்ச்சி அவர்களும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதோடு,இச் சந்தர்ப்பத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் இராஜங்க செயலாளர் திரு.சாந்த பண்டார, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேலதிக செயலாளர் (இளைஞர் விவகார) கலாநிதி கே.ஏ.எஸ்.கீரகல, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், தேசிய இளைஞர் பரிசளிப்பு பிரிவின் தேசிய பணிப்பாளர் திரு.திஸ்ச சமரசிங்க,கல்வி அமைச்சின் பணிப்பாளர் (விடயம் தொடர்பான) திரு.வயி.ஏ.என்.டி.யாபா தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேலதிக செயலாளர், தினேஷ் விதானகமாச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிசளிப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி.ஷாரிகா லியனஆராட்ச்சி மற்றும் அப்பிரிவின் நிறைவேற்று செயலாளர் திரு.பீ.எஸ்.கௌதமதாச அவர்களும் பங்குப்பற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -