அர­சி­யலில் கால் பதிக்க நான் தயா­ரில்லை -கோத்தபாய

ரி­யான தலை­மைத்­து­வத்தின் கீழ் சேவை­யாற்­றவே நான் விரும்­பு­கின்றேன். மாறாக அர­சி­யலில் கால் பதிக்க நான் தயா­ரில்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பி­லான சட்­ட­மூலம் இரா­ணு­வத்தை தண்­டிக்கும் வகை­யி­லேயே அமையும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இத­னைக்­கு­றிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறி­கையில்,

காணாமல் ஆக்­கப்­ப­டுவோர் தொடர்பில் கொண்டு­வ­ர­வி­ருந்த சட்­ட­மூலம் தற்­கா­லி­க­மாக தடுக்­கப்­பட்­டுள்ள போதிலும் இதனை நிரந்­த­ர­மாக தடுக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விடின் இந்த சட்­ட­மூ­லத்தில் உள்ள விட­யங்கள் அனைத்தும் யுத்­தத்தை நிறை­வுக்கு கொண்­டு­வர தியாகம் செய்த அனைத்து இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக அமையும். இரா­ணுவ வீரர்­களை தண்­டிக்க அனை­வரும் துணை­போ­ன­தாக அமைந்­து­விடும்.

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு ஆண்­டு­கள் கடந்­துள்ள போதிலும் இன்னும் எம்மை ஊழல் குற்­ற­வா­ளிகள் என்ற பெயரில் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றதே தவிர இது­வ­ரையில் அவர்கள் முன்­வைத்த எந்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் உண்­மை­களை நிரூ­பிக்க முடி­ய­வில்லை.

ஆகவே, இவர்கள் பொய்­களை கூறி மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர் என்­பது தெளி­வா­கின்­றது. ஆகவே, இவர்கள் எம்மை பழி­வாங்­கவே இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர் என்­பது தெளி­வாக தெரி­கின்­றது. எம்­முடன் இணைந்து செயற்­பட்ட நபர்­களே இன்று எமக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆகவே, அவர்கள் எமக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு முன்­வைக்க முன்னர் மனச்­சாட்­சியை கேட்க வேண்டும்.

இப்­போது மக்கள் நிய­மித்­துள்ள அர­சாங்கம் மிகவும் பொருத்­த­மில்­லாத ஒரு அர­சாங்­க­மாகும். மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை கவ­னத்தில் கொள்­ளாது தமது தேவைக்­கான ஆட்­சியை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனவே, பொருத்­த­மான தலை­மைத்­து­வத்தை மீண்டும் உருவாக்க மக்கள் முன்வரவேண்டும். எனினும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள நான் விரும்பவில்லை. சரியான அரசியல் தலைமையின் கீழ் சேவையாற்றவே நான் விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -