வாங்காமம், தாண்டியடியில் புதிய ஆரம்ப வைத்திய பாராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு





சப்னி அஹமட் -

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியில் இறக்காமம், வாங்காமம் பிரதேச மக்களின் நலன்கருதி 8.6 (8,681,275.00) மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீட்டில் ஆரம்ப வைத்திய பாராமரிப்பு பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும், தாண்டியடி பிரதேசத்திற்கான 8.6(8,677,455.00) மில்லியன் ரூபா நிதியில் ஆரம்ப வைத்திய பாராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று (08) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், சிறுவர்நன்னடத்தை, கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டார். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டார்.


அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்;


ஜனாதிபதியின் விசேட நிதி மூலம் கிழக்கு மாகாணத்தில் 08 பிரதேசத்தில் 10மில்லியன் ரூபா நிதியில் ஆரம்ப வைத்திய பாரமரிப்பு நிலையம் அமைப்பதற்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது அதில் கல்முனை பிராந்தியத்தில் இரண்டு ஆரம்ப பிரிவுகளை அமைப்பதற்காக நாம் தாண்டியடி பிரதேசத்தையும், வாங்காமம் பிரதேசத்தையும் அடையாளப்படுத்தி அத்திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.

எமது ஆட்சிக்காலத்தில் மூவின மக்களுக்கும் சமாமான வைத்திய சேவைகளை நாம் வழங்குவதற்கு நாம் தயாராகி வருகின்றோம் அதிலும் குறிப்பாக இவ்வாறான பிரதேசங்களில் சுகாதார வளம் என்பது குறைந்த அளவில் காணப்படுகின்றது. அதனால் நாம் இவ்வாற பின் தங்கிய பிரதேச மக்களை கருத்திற்கொண்டு ஆரம்பித்திருகின்றோம். எனவும் அங்கு அமைச்சர் தெரிவித்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஐ.எம் மாஹிர், ராஜேஸ்வரன், கலையரசன், கிழக்கு மாகாண சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் முருகானந்தன், உதவிச்செயலாளர் உசைனுடீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அலாவுத்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -