நிலாவெளியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப அலுவலகம்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை நிலாவெளியில் இருந்து திரியாய் வரையான 60 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இப் பகுதி காணப்படுகிறது. இப்பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்களும் காணப்படுகின்றது.இப்பகுதியூடாக வாழும் மக்கள் நீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்தல் முதல் பல தேவைகளின் பொருட்டு திருகோணமலை காரியாலயத்திற்கே வரவேண்டியுள்ளது.

இது மக்களுக்கு பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவித்துள்ளது எனவே நிலாவெளியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை உபகாரியாலயம் ஒன்றை அமைத்துத் தருமாறு முன்னாள் குச்சவெளி பினதேச சபை உறுப்பினர் எம்.டி.சபீக் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் இம்மாதம் 15 ம் திகதி நடாத்தப்படவிருக்கும் பொதுமக்களுக்கான குடி நீர் பிரச்சினைதொடரர்பாான நடமாடும் சேவைக்கான எழுத்து மூலமான கடிதத்தில் கோரிக்கையை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கு கோரிக்கையை முன்வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது எமது பிரதேச மக்கள் அன்றாடம் பல சிரமங்களை எதிர்நோக்குவதுடன் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் முன்னர் நிலாவெளியில் இருந்த உப அலுவலகம் மூடப்பட்டுள்ளது இதனை மீள திறந்து மக்களுக்கு குடி நீர் இணைப்புக்களை வழங்குவயற்கும் சேவைகளை இலகுவாக பெறக்கூடியதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் மேலுஅக்கடிதத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -