களஞ்சியசாலையை இடமாற்ற ஒரு வார கால அவகாசம் - பிரதி அமைச்சர் ஹரீஸ்





அகமட் எஸ். முகைடீன்-

ல்முனை நகர மண்டபத்தில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலையை ஒரு வார காலத்திற்குள் இடம்மாற்றி குறித்த மண்டபத்தை மக்கள் பயன்படுத்தும்வகையில் மாநகர சபைக்கு மீள ஒப்படைக்குமாறு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் களஞ்சியசாலை உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த கல்முனை மாநகர சபை ஆட்சிக்காலத்தில் சபை வருமானத்தை அதிகரிக்கும்வகையில் கல்முனை நகர மண்டபத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த ஒப்பந்த காலம் முடிவுற்ற நிலையிலும் அம்மண்டபத்தை மாநகர சபையிடம் மீளளிக்காமல் தொடர்ச்சியாக களஞ்சிய சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பொது அமைப்புகள் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து இவ்விடயம் சம்பந்தமாக மாநகர ஆணையாளரிடம் பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டறிந்ததோடு இன்று (8) நேரில் சென்று பார்வையிட்டு மேற்படி உத்தரவை பிரதி அமைச்சர் பிறப்பித்தார். இதன்போது களஞ்சியசாலையில் உள்ள பொருட்களை அகற்றுவதற்கு சில மாதகால அவகாசம் கோரப்பட்ட போதிலும் இதற்கு முன்னரே தேவையான அளவு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமையினால் ஒரு வார காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறகத்துல்லாஹ், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -