டிஎம்கே கல்வி நிறுவனம், அமைச்சர் றிஷாத்தினால் திறந்துவைப்பு!!!







எம்.வை.அமீர்-

ல்விரீதியாக வழிகாட்டலின்றி இருப்பவர்களை சிறந்த வளவாளர்களைக்கொண்டு, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாட்டுக்கும் பயன்படக்கூடியவர்களாக, புடம்போடுவதை இலக்காகக்கொண்டு டிஎம்கே கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்று சாய்ந்தமருதில் 2017-07-09 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

டிஎம்கே கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.கலீல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கல்விநிறுவன திறப்புவிழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாக றிஷாத் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிறுவனத்தைத் திறந்துவைத்தார்.

உயர்கல்வி,தொழில்வழிகாட்டல்,வியாபார முகாமைத்துவம்,இலவச கருத்தரங்குகள் மற்றும் தொடர்பாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்ப்போருக்கு அங்கு தேவைப்படும் தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல் என பல்வேறு இலக்குகளை நோக்காகக் கொண்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த நிறுவன திறப்புவிழாவின்போது கௌரவ அதிதிகளாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரும் விசேட அதிதிகளாக அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் லக்சல நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர், உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கல்வியாளர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -