பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அட்டாளைச்சேனை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு இணைத்தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ;சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமினால் குறித்தொதுக்கப்ட்ட கூட்டத்திகதியில் கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறித்து இணைத்தலைவரும், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோவுக்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேற்படி விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டதற்கமைய மாவட்ட அரசாங்க அதிபரினால் உரிய பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை மேற்குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் 17, 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள இறத்து செய்யப்பட்டுள்ளதுடன் இதனை பிறிதொரு தினத்தில் நடத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.