அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபைக் கூட்டம்



றிசாத் ஏ காதர் -

கில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபை கூட்டம் நிருவாக ஆலோசகர் ரீ.விக்ரமரசிங்கம் தலைமையில் கடந்த 2017.07.22ஆம் திகதி (சனிக்கிழமை) கல்முனை பல்தேவைக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிருவாக குளருபடிகள் காரணமாக சங்கத்தில் முகாமைத்துவ சபையினை கூட்டுமாறு செயலாளர் ஒப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பிவைத்திருந்தார். அக்கடிதத்துக்கு அமைவாகவே கடந்த சனிக்கிழமை இக்கூட்டம் இடம்பெற்றதாக நிருவாக ஆலோசகர் ரீ.விக்ரமசிங்கம் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்துக்கு முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வஹாப் உட்பட, முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேற்படி கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

01. தொழிற் சங்கத்தினால் 2017.05.01ஆந் திகதிய பொதுச் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சபை தொழிற் சங்க யாப்பு விதிமுறைகளுக்கு அமைய கூட்டப்படாமையை வன்மையாக கண்டிப்பதுடன், தொழிற்சங்க தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்யப்படுகின்றது.

02. தொழிற்சங்க யாப்பின் பந்தி 04, 24க்கு அமைவாக விசேட பொதுச் சபைக்கூட்டத்தை தொழிற்சங்க தலைமைக்காரியாலம் அமைந்துள்ள இடத்தில் சங்க ஆலோசகர்களின் தலைமையில் கூட்டப்படுதல் வேண்டும். இக்கூட்டத்துக்கு சகல தொழிற்சங்க ஆலோசகர்கள், மாவட்டக்கிளை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் கலந்துகொள்ளல் வேண்டும் என பிரகடனம் செய்யப்படுகின்றது.

03. குறித்த எமது தீர்மானத்துக்கு முரணாக தொழிற்சங்கத் தலைவர் செயற்பட்டால் தாபன விதிக்கோவை அத்தியாயம் ஓஓஏ க்கு அமைவாகவும், தொழிற்சங்க பொதுவான சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்துக்கு சட்ட நடவடிக்கைக்காக முன்வைக்கப்படும்.

04. பொதுச் சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு புதிய நிருவாகம் தெரிவுசெய்யப்படுமானால் அந்த நிருவாகத்தை ஏற்றுக்கொள்வதுடன், தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இச்சபை ஒரு போதும் உடன்படாது என்பதனையும் தெளிவாக தெரியப்படுத்துகின்றோம். என்றும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -