பொத்துவில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதில் பிரதி அமைச்சர் மும்முரம்..!

அகமட் எஸ்.முகைடீன்-
பொத்துவிலில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட சர்வோதய புரக் காணியை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை விரைவில் எடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரிடம் வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று (14) வெள்ளிக்கிழமை வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்தை கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து விடுத்த வேண்டுகோலை ஏற்று மேற்படி உறுதி மொழியினை வழங்கினார். பொத்துவில் பிரதேசத்தில் வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் இன்மையானது பெரும் குறையாக இருந்து வருகின்றது. இதனைக் கருத்திற்கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அப்பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தை அமைப்பது தொடர்பாக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகின்றார். 

இருந்தபோதிலும் விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு உகந்த பொது இடம் இல்லாதது சிக்கல் நிலையை தோற்றிவித்தது. இதனால் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு பொத்துவில் சர்வோதய புரத்திலிருந்து 15 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதனை வனப் பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸரத், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களான எம். மர்சூக், எம்.எஸ். அப்துல் வாஸித், உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்து இது தொடர்பில் அம்பாறை வனப் பாதுகாப்புத் திணைக்களத்துடனும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினுடனும் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். 

விளையாட்டுத்துறை அமைச்சு குறித்த விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு பெருந்தொகையான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் வனப் பாதுகாப்பு திணைக்களம் இன்னும் குறித்த காணியினை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வது தொடர்பில் பொது மக்கள் அதிருப்தியுற்று விசனம் தெரிவித்து வருகின்றனர். 

எனவே குறித்த காணியை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்தை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதனை வனப்பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டு குறித்த காணியில் மைதானம் அமைப்பதற்கு ஏதுவாக அதனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதேவேளை அம்மைதானத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பாதற்கான நடவடிக்கையினை விரைவு படுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் பிரதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -