அதிபர்களின் வழிகாட்டலினூடாகவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் செயற்பாடுகள் அமைகின்றது




நோட்டன் பிரிட்ஜ்மு.இராமச்சந்திரன் -

திபர்களின் வழிகாட்டலினூடாகவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் செயற்பாடுகள் அமைகின்றது ஆகவே தலைமைத்துவத்தை சரியாக. கொண்டு நடத்த முடியாதவர்கள் அதிபர் துறையிலிருந்து வெளியேரிவிடுங்கள் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

மத்திய மாகாணம் நுவரெலியா கல்வி வலயத்தில் பாடசாலைகளில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான அதிபர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தாார்.

நுவரெலியா சென்சேவியர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் 03.07.2017 இடம் பெற்றது இந் நிகழ்வில் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ். .சதிஸ் , மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி. சத்தியேந்திரா, நுவரெலியா வலய கல்வி கல்வி பணிப்பாளர் கே..பியதாஷ , நுவரெலியா வலய மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் அமைச்சின் உத்தியோகத்தர்கள் பாடசாலையின் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

தொடர்ந்து இங்கு அமைச்சர் உரையாற்றுகையில் ஒரு சமூக மாற்றத்தில் பாடசலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது ஒவ்வெறு மனிதனுக்கும் கல்வி அத்தியவசியமானது அவ்வாறு முக்கியதுவம் வாய்ந்த கல்வித்துறையில் மாணவர்கள்.ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கிடையிலான அன்மைக்கால மோதல் சம்பவங்கள் போன்று இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்து ஆகவே சிறந்த தலைமைத்துவத்தை கொண்டு பாடசாலைகளில் பல்வேறு சாதனைகளை படைக்கும் அதிபர்களுக்கு மத்தியில் ஒரு சில தலைமைத்துவ பன்பற்ற அதிபர்களின் செயற்பாடுகளினாலே பாடசலைகளில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளது ஆகவே முடியாதவர்கள் இத்துறையிலிருந்து ஒதுங்கிவிடுங்கள் இனி வரும் காலங்களில் பாடசாலைகளில் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பாராபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -