சம்பள பிரச்சினையால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பாதிக்கக்கூடும்





ஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த 1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வீரர்களின் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த மாற்றத்தின்படி வீரர்களின் ஊதியம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டது.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜூன் 30-ந்தேதி இறுதித் தேதியாகும். அதற்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால் வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.

இருந்தாலும் வீரர்கள் சங்கம் உடன்படவில்லை. இதனால் வீரர்களின் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. ஆகவே, 200-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் இணைந்து பிரச்சினையை தீர்க்க முன் வரவேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்த பிரச்சினை குறித்து கிளார்க் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் வேறு விஷயத்தில் கவனம் செலுத்தும் நிலை உள்ளது. அதனால் 12 மாத ஒப்பந்தத்தை நீட்டித்து வீரர்கள் கிரிக்கெட் மீது கவனம் செலுத்த வைக்க வேண்டும்.

எந்தவொரு கிரிக்கெட்டையும் தவற விடுவதை நான் விரும்பவில்லை. ஏனென்றால், ஒரு வீரராக தயாராவது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றோடு வெளியேற்றப்பட்டுள்ளோம். இந்திய மண்ணில் தொடரை இழந்துள்ளோம். வீரர்களுக்கு அவர்களுடைய தயாராகும் பணியில் 100 சதவீதம் கவனம் தேவையானது. கிரிக்கெட்டில் மீண்டும் மேலே வருவது மிகக்கடினம்’’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -