மட்டக்களப்பில் என்ன நடக்கின்றது..? இப்றாஹிம் ஹோட்டலில் நாய் இறைச்சியா..?

எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்த இரு வாரங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் ஒரு முஸ்லிம் இறைச்சி வியாபார நிலையத்தில் நாய் இறைச்சி விற்பனை செய்தவர் கைது என்ற செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அந்த வியாபார நிலையமோ! உரிமையாளரோ! அடையாளப்படுத்தபடவில்லை மாறாக அச்செய்தியில் சேர்க்கப்பட்டிருந்த புகைப்படம் சுகாதாரம் இன்மையால் மட்டக்களப்பில் சீல் வைக்கப்பட்ட இப்றாஹிம் ஹோட்டல் என்பதுவும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறான நாய் இறைச்சி விற்கப்பட்டதாக சொல்லப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதுவும் தெரிய வந்தது.

இந்நிலையில் குறித்த இப்றாஹிம் ஹோட்டலிலேயே நாய் இறைச்சி சமைத்து விற்றதாக அதே புகைப்படங்களுடன் செய்தியினைப் பார்க்க கிடைத்தது..? ஏற்கனவே சுகாதாரமின்மையால் சீல் வைக்கப்பட்ட ஹோட்டலை எவ்வாறு எப்போது திறந்தார்கள் என்பது புதிர்...???

இதே வேளை பாசிக்குடாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களால் பள்ளிவாயல் கட்டப்படப்போவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பள்ளிவாயல் விஸ்தரிக்கப்படப் போவதாகவும் செய்திகள் முகநூல் வாயிலாக பரவுகின்றன ஆனால் உரிய தரப்புகளை விசாரித்தால் இச்செய்திகளிலும் எந்த உண்மையும் இல்லை.

இவைகளை விட பெரும் அதிர்ச்சி தரும் விடயம் என்னவெனில் முஸ்லிம் கடைகளில் சாப்பிட வேண்டாம் ஆடை மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டாம் என தமிழர்களை பகிஸ்கரிக்க கோருகின்றனர். இதனைப்பார்த்தவுடன் பட்டனத்தானாயினும் பட்டிக்காட்டானிடம் தேவையுடையவனே எனும் அரேபிய பழமொழி நினைவுக்கு வருகிறது. 

அதாவது ஒவ்வொரு மனிதனும் பிற சகோதரனிடம் தேவையுடையவனே. முஸ்லிம்கள் கடையில் இந்துக்கள் கொள்வனவு செய்யக் கூடாது என்றால் களுவாஞ்சிகுடி, களுதாவளையில் விளையும் காய்கறிகளை முஸ்லிம்கள் புறக்கனிக்கலாமா? அல்லது இந்துக்கள் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் ஹோட்டல்களை அகற்றுவதால் முஸ்லிம் பகுதிகளில் உள்ள அன்றாடம் காட்சிகளாகிய சிகை அலங்காரக் கடைகள் நடத்துபவர்கள் மற்றும் கட்டிடத் தொழில் புரிபவர்களை அகற்றுவது ஏற்புடையதாகுமா?

இன்னும் சொல்லப்போனால் இந்தியா எனும் பெரும்பான்மை இந்துக்கள் தயாரிப்பு என்பதற்காக முஸ்லிம்கள் மோட்டார் சைக்கிளையும், பெற்றோல் அரபு நாட்டு இரக்குமதி என்பதற்காக இந்துக்களும் எவ்வாறு புறக்கனிக்க முடியாதோ அவ்வாறே இதுவும் என்பதை இரு சாராரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக இவ்வாறு போலியான முகநூல் பக்கங்களில் பகிரப்படும் போலியான வதந்திகளை நம்பாமலும் செயார் செய்யாமலும் குறிப்பாக தேவையற்ற பின்னூட்டங்களை தவிர்ந்து இருப்பதனூடாகவும் இரு இனத்தின் ஒற்றுமைக்கு பங்காற்றுவோம்.
எம்.ரீ..அப்துல் ரஹ்மான்(அஸ்ஹரி).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -